தேசிய செய்திகள்

அக்டோபர் 4-தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்குக் முதல் தவணை தடுப்பூசி - கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல் + "||" + First installment of vaccination for college students by October 4 - Kerala Health Minister Veena George

அக்டோபர் 4-தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்குக் முதல் தவணை தடுப்பூசி - கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்

அக்டோபர் 4-தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்குக் முதல் தவணை தடுப்பூசி -  கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
கேரளாவில் அக்டோபர் 4-ம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என அம் மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,

கேரளா சுகாதாரத் துறை மந்திரி  வீணா ஜார்ஜ்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

செப்டம்பர் 30-க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் 4-க்குள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.

எங்களிடம் உள்ள தகவலின்படி, ஜூன் 15 முதல் செப்டம்பர் வரை உயிரிழந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆவர்.