தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை + "||" + Delhi reports 36 new cases, 35 recoveries and zero deaths in the last 24 hours

டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை

டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை
டெல்லியில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,38,818 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.05 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,083 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14,12,620 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் தற்போது 415 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - புல்டோசர் முன் அமர்ந்து எம்.எல்.ஏ தர்ணா
டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர் கொண்டு வரப்பட்டதால் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. டெல்லியில் இன்று 1,422 பேருக்கு கொரோனா; 1,438 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 5,939 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பரபரப்பான ரோட்டில் காரை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ
பரபரப்பான ரோட்டில் காரை வழிமறித்து கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.