தேசிய செய்திகள்

விநாயக சதுர்த்தி: மராட்டியத்தில் சந்தையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம் + "||" + Vinayaka Chaturthi: A crowd of people gathered to buy goods at a market in the Marathas

விநாயக சதுர்த்தி: மராட்டியத்தில் சந்தையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

விநாயக சதுர்த்தி:  மராட்டியத்தில் சந்தையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்
மராட்டியத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் குவிந்தது.


மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 2வது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது.  இதனை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனினும், மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.  இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை விநாயக சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்புடன் பண்டிகையை கொண்டாடும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.  எனினும், மராட்டியத்தின் மும்பை நகரில் தாதர் மார்க்கெட் பகுதியில் மக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில் குவிந்துள்ளனர்.

சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவற்றை முறையாக பின்பற்றாமல் ஒரு சிலர் அலைந்து திரிந்தனர்.  இதனால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் அதிகரித்து காணப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவுக்கு எதிரான தடை; இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்...?
ரஷியா மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்த தடையால் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது.