தேசிய செய்திகள்

தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம்; ஜனாதிபதி உத்தரவு + "||" + RN Ravi appointed new Governor of Tamil Nadu; Presidential order

தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம்; ஜனாதிபதி உத்தரவு

தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம்; ஜனாதிபதி உத்தரவு
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.சென்னை,

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி என்பவரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  இவர் நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார்.

ரவீந்திர நாராயண ரவி என்ற முழு பெயரை கொண்ட அவர், பீகாரில் பிறந்தவர்.  கடந்த 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கிய அவர், மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பஞ்சாப் கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.  இந்த சூழலில், பன்வாரிலால் புரோகித்துக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு
கூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளு படியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி நடந்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பான தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2. மாயமான நில ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமானது குறித்து நில நிர்வாகத்துறை ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
3. தொலைதூர முறையில் தொழில்கல்வி நடத்த தடை கேட்டு வழக்கு: அண்ணாமலை பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும்
தொழில்கல்விகளை தொலைதூர கல்வி முறையில் நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம்பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
மாவட்ட வருவாய் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5. தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.