தேசிய செய்திகள்

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியது + "||" + 72 crore doses of Coronavirus vaccine administered in the country so far

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியது

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியது
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக பிப்ரவரி 2-ம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது.

இதேபோல் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்ரல் 1- ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. 

அதன்பின்னர், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியுள்ளது. கோவின் இணையதள தகவலின் படி, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 72 கோடியே 28 லட்சத்து 17 ஆயிரத்து 595 ஆக உள்ளது. 

குறிப்பாக இன்று ஒரேநாளில் (மாலை 7 மணி நிலவரப்படி) 73 லட்சத்து 80 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி
60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2. கரூரில் 50 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் 624 இடங்களில் நடைபெற்ற மெகா சிறப்பு முகாம்களில் 50 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3. மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும்: சுகாதாரத்துறை அமைச்சர்
தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
4. 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
5. 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.