கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா பயணம் + "||" + India to tour South Africa for all-format series in December-January

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா பயணம்

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா பயணம்
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜோகனர்ஸ்பர்க் மைதானத்தில் டிசம்பர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.