கிரிக்கெட்

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை + "||" + Manchester Test: Indian players return negative results for Coronavirus

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற உள்ளது.
லண்டன்,

இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற உள்ளது.

இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் யோகிஷூக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், உடற்பயிற்சியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்திய வீரர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தொற்று பரவவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா 'நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளதால் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.