மாநில செய்திகள்

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து + "||" + Appointed Governor of Tamil Nadu RN Ravi; CM congratulates

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெவித்துள்ளார்.சென்னை,

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி என்பவரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  ரவி, நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார்.

ரவீந்திர நாராயண ரவி என்ற முழு பெயரை கொண்ட அவர், பீகாரில் பிறந்தவர்.  கடந்த 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கிய அவர், மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பஞ்சாப் கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.  இந்த சூழலில், பன்வாரிலால் புரோகித்துக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!

தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!  தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரம்ஜான் பண்டிகை: கமல்ஹாசன் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ரமலான் வாழ்த்து
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
3. முதல்-அமைச்சர் ரமலான் வாழ்த்து ‘‘இஸ்லாமியர்களுடனான உறவு என்றைக்கும் நிலைத்து நிற்கும்’’
ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. அரசியல் கட்சி தலைவர்கள் ரமலான் வாழ்த்து
ரமலான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
5. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு வி.கே.சசிகலா வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு வி.கே.சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.