கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ரஷித் கான்... + "||" + Rashid Khan steps down as captain protesting against Afghanistan's T20 World Cup squad selection

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ரஷித் கான்...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ரஷித் கான்...
டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
காபுல்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. கேப்டனாக ரஷித் கான் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் இரண்டு மாற்று வீரர்கள் உள்பட மொத்தம் 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார். 

உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது கேப்டன் என்ற முறையில் தேர்வுக்குழுவினர் தன்னிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடம் கலந்து ஆலோசிக்காமலேயே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ரஷித் கான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது நபி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.