தேசிய செய்திகள்

ஒடிசாவில் தீக்குச்சிகளை கொண்டே விநாயகர் சிலையை வடிவமைத்து பூஜிக்கும் கலைஞர் + "||" + An artist who designs and worships a Ganesha statue with matches in Odisha

ஒடிசாவில் தீக்குச்சிகளை கொண்டே விநாயகர் சிலையை வடிவமைத்து பூஜிக்கும் கலைஞர்

ஒடிசாவில் தீக்குச்சிகளை கொண்டே விநாயகர் சிலையை வடிவமைத்து பூஜிக்கும் கலைஞர்
ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீக்குச்சிகளை கொண்டே விநாயகர் சிலையை கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.


பூரி,

ஒடிசாவின் பூரி நகரை சேர்ந்தவர் சஸ்வத் சாஹூ.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாச விநாயகர் வடிவம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் 5,621 தீக்குச்சிகளை கொண்டு 8 நாட்களாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதன் பயனாக 23 அங்குலம் நீளம் மற்றும் 22 அங்குலம் அகலம் கொண்ட விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி என்னுடைய வீட்டிலேயே வழிபடுவேன் என அவர் கூறியுள்ளார்.