உலக செய்திகள்

பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் - தலீபான் + "||" + Woman can't be a minister, they should give birth: Taliban spokesperson

பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் - தலீபான்

பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் - தலீபான்
பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காபுல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதும் மறுக்கபட்டு வருகிறது. தலீபான்களின் ஆட்சியில் பெண்கள் யாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. 

விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. இதனால், தலீபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் மந்திரிகளாக முடியாது என தலீபான்களின் செய்தித்தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சையது கூறுகையில், பெண் மந்திரியாக முடியாது. பெண்கள் மந்திரியாவது என்பது பெண்களுக்கு அவர்களின் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும். 

பெண்கள் மந்திரி சபையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. போராட ,விளையாட ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலீபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில்பெண்கள் உரிமை கோரி நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தலீபான்கள் தடைவிதித்து உள்ளனர்
2. பத்திரிகையாளர்கள் உடம்பில் காயம்: தலீபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ...? பொதுமக்கள் அச்சம்...!
இடைக்கால அரசின் பிரமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலீபான்கள் கைது செய்து உள்ளனர்.
3. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் - பரூக் அப்துல்லா
இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.
4. தலீபான்களின் முன் துப்பாக்கியை கண்டு பயம் இல்லாமல் எதிர்த்து நிற்கும் பெண்கள்
தலீபான்களுக்கு உள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தலீபான் படைகள் இப்படி மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த தலையீட்டிற்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.
5. தலீபான்கள் இடைக்கால பிரதமரை அறிவித்த நிலையில், இன்று 5 பத்திரிகையாளர்கள் கைது
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால மந்திரிசபையையும் , இடைக்கால பிரதமரையும் அறிவித்து உள்ளனர்.