தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து + "||" + Ganesh Chaturthi: Prime Minister Modi Greeting

விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ” நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவருக்கும் மகிழிச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், ஆகியவை கிடைக்க வாழ்த்துகிறேன் ” கணபதி பாப்பா மோரியா !என்று மோடி தெரிவித்துள்ளார்.