மாநில செய்திகள்

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு + "||" + Tamil Nadu | A special ward for Nipah virus patients has been set up in Govt Rajaji Hospital in Madurai

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை,

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நிபா வைரசும் பரவ தொடங்கியுள்ளது. அங்கு நிபா வைரசுக்கு ஒரு சிறுவன் இறந்துள்ளான். இதனால் கேரளாவை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில் தமிழகத்திலும் நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மருத்துவர் நடராஜன் கூறுகையில், மாவட்டத்தில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, ஆனால் நிபா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அனைத்து படுக்கைகளிலும் வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.