மாநில செய்திகள்

தொடர் விடுமுறை; பஸ்களில் 1.29 லட்சம் பேர் வெளியூர் பயணம்! + "||" + Series of holidays; 1.29 lakh people travel abroad in buses!

தொடர் விடுமுறை; பஸ்களில் 1.29 லட்சம் பேர் வெளியூர் பயணம்!

தொடர் விடுமுறை; பஸ்களில் 1.29 லட்சம் பேர் வெளியூர் பயணம்!
தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் 1.29 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை,

விநாயகர் சதுர்த்தி வார இறுதி நாட்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் 1.29 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சிறப்புப் பேருந்துகள் என 2,642 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் 1.29 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.  போதுமான பஸ் வசதியில்லாததால் பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்...
தொடர் விடுமுறை எதிரொலியாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.