மாநில செய்திகள்

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ; விபத்தில் ஒருவர் பலி-வீடியோ + "||" + Illegal production of firecrackers near Sivakasi; One person was killed in the crash

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ; விபத்தில் ஒருவர் பலி-வீடியோ

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ; விபத்தில் ஒருவர் பலி-வீடியோ
சிவகாசி அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.
சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது தாயில்பட்டி. இங்கு எஸ்பிஎம் தெருவில் ஒரு வீட்டில் வைத்து சட்டவிரோதமாக  பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. அதில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது திடீர் என பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.  இதில் அந்த வீடு எரிந்து சேதம் அடைந்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் சண்முகராஜ் என்பவர் உயிரிழந்தார்.

வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.