மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து + "||" + Edappadi Palanisamy and O. Panneer Selvam congratulate the new Governor of Tamil Nadu

தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து

தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு பஞ்சாப் கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கேரளாவில் சிறந்த காவல்துறை தலைமை அதிகாரியாகவும், நாகலாந்து மாநில ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றி தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய கவர்னராக  பொறுப்பேற்க உள்ள பீகாரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களின் பணி சிறக்க  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

நாகலாந்து அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதை அதிமுக சார்பில் வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழகத்தின் வளர்ச்சியை பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க நாளை மறுதினம் மாபெரும் தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்காக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
2. தமிழகத்தின் புதிய கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.