மாநில செய்திகள்

மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கே மூடுவிழா வரும் - ப.சிதம்பரம் + "||" + Closing ceremony for the public sector through the Central Government's National Monetization Program - P. Chidambaram

மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கே மூடுவிழா வரும் - ப.சிதம்பரம்

மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கே மூடுவிழா வரும் - ப.சிதம்பரம்
மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கே மூடுவிழா வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை,

இது குறித்து சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

மத்திய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பொதுத்துறைக்கே மூடுவிழா வரும். பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றனர்.  சமையல் எரிவாயு விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என மோடி அரசு கூறியது உண்மை அல்ல. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மோடி அரசு தவறான தகவல் தெரிவித்துள்ளது. 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் . தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொலிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு; மோடிக்கு மீண்டும் கடிதம்
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த மசோதா தொடர்பான நடவடிக்கைகளை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு அவர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
2. மத்திய அரசின் நலத்திட்ட தகவல்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் - எல்.முருகன் அறிவுறுத்தல்
மத்திய அரசின் நலத்திட்ட தகவல்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடகப் பிரிவு மத்திய இணை மந்திரி எல்.முருகன் அறிவுறுத்தினார்.
3. மத்திய அரசின் ‘தவறான தடுப்பூசி கொள்கை 3-வது அலையை ஏற்படுத்தும்’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கை 3-வது அலையை ஏற்படுத்தும் எனவும், சரியான தடுப்பூசி கொள்கையே இந்தியாவுக்கு தேவை எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.