உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை + "||" + Tomorrow, Russian cosmonauts Oleg Novitskiy and Pyotr Dubrov will venture outside the Space_Station

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை ஏற்பட்டது பின்னர் சரி செய்யப்பட்டு திட்டமிட்டபடி ரஷிய விண்வெளி வீரர்கள் விண்ணில் நடைபயணம் மேற்கொண்டனர்.
வாஷிங்டன்

அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தற்போதைக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு வீரர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேர் ரஷ்யாவின் காஸ்மோனாட்டுகள். மூன்று பேர் அமெரிக்கா்கள், பிரான்ஸ் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் v திடீரென பிளாஸ்டிக் புகை வாசனை வந்தது. இதனால்  அலாரம் ஒலித்தது . பிளாஸ்டிக் புகை வாசனை அங்கிருந்தவர்களை சிறிது நேரம் திகைக்க வைத்தது. பில்டர் கருவிகள் மூலம் புகையை கட்டுப்படுத்திய விண்வெளி வீரர்கள் பின்னர் உறங்கப் சென்றனர். அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த புதிய பிரச்சினை ஏற்பட்டது.

பின்னர் திட்டமிட்டபடி ரஷிய விண்வெளி வீரர்கள் விண்ணில் நடைபயணம் மேற்கொண்டனர். 

கடந்த ஜூலை மாதம்  ரஷிய விண்கலம் இணைந்தபோது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் 45 நிமிடங்களுக்குக் கட்டுப்பாட்டை இழந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. வியாழனன்று ரஷியாவின் ஆய்வு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.

அது ஒரு குறுகிய காலத்திற்கு கட்டுப்பாட்டை இழந்தது. அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளால் 2025 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு விலகி தனி விண்வெளி நிலையத்தை அமைக்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் நாசாவின் ஹெலிகாப்டர்
செவ்வாய் கிரகத்தில் ‘இன்ஜெனுயிட்டி’ ஹெலிகாப்டர் ஏப்ரல் 8-ந் தேதிக்குள் பறக்க விடப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.