தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: கட்சியினருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை + "||" + Priyanka Gandhi on 3-day visit to review Congress' UP poll readiness

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: கட்சியினருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: கட்சியினருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை நடைபெற்றது.
லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

வருகின்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.கவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

பிரியங்கா காந்தி அங்கு 3 நாட்கள் தங்கி இருந்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசம்: பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
உத்தரபிரதேசத்தில் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
2. உத்தரபிரதேசம்: சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி
உத்தரபிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
3. துப்பாக்கியுடன் டிக் டாக் வீடியோ : பெண் போலீசுக்கு சிக்கல்
போலீசாரிடம் துப்பாக்கி இருப்பது உயிர்களைக் காக்கவும் தற்காப்புக்காகவும் மட்டும்தான் என்பதை போலீசார் மறந்துவிடக்கூடாது.
4. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக 40 ரயில்கள் ரத்து
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக 40 ரயில்களை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் 6 சாலைகளுக்கு கல்யாண் சிங் பெயர் - மாநில அரசு அறிவிப்பு
உத்தரபிரதேசத்தில் 6 சாலைகளுக்கு கல்யாண் சிங் பெயர் சூட்டப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.