மாநில செய்திகள்

தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பரிசோதனைகளை அதிகரிக்க கலெக்டர்களுக்கு அறிவுரை + "||" + Tamil Nadu: Increase in daily corona exposure Advise collectors to increase experiments

தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பரிசோதனைகளை அதிகரிக்க கலெக்டர்களுக்கு அறிவுரை

தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பரிசோதனைகளை அதிகரிக்க கலெக்டர்களுக்கு அறிவுரை
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை

தமிழகத்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு முதல் 1,587 லிருந்து அதிகரித்து 1,596 ஆகப் பதிவாகியது. இது நேற்று முன்தின எண்ணிக்கையை விடச் சற்று அதிகம்.  இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த  தொற்று இரண்டாம் நாளாக நேற்றும் அதிகரித்திருந்தது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,59,684 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர்களுக்கு  சென்னை மாநகராட்சிக்கும் மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளர்.

கடிதத்தில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதைத் திட்டமிட்டுத் துரிதப்படுத்த வேண்டும் என அந்த  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் கொரோனா கண்டறியப்படும் நபருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்.

12ஆம் தேதி மெகா முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 55.5 கோடி
நாடு முழுவதும் 55.5 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
2. கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை
கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கொரோனாவை ஒழிக்க சிவப்பு எறும்பு சட்னி...! மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தர செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
4. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5. கோவில்கள் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை - தமிழக அரசு
சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும் வழிப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.