உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி + "||" + Isolating Afghanistan will have 'serious consequences' for region and world at large: Pak FM Qureshi

ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி

ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும் என்று ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.
இஸ்லமாபாத், 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த மாதம் 15-ந் தேதி முடிவுக்கு வந்தது. அங்கு எப்போதும் துப்பாக்கியும், கையுமாக அலைகிற தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசையும் தலீபான்கள் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில், தலீபான்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகத்துக்கும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார். 

 பாகிஸ்தானில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள ஸ்பானிஷ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஷா முகம்மது குரோஷி இந்தத் தகவலை தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஸ்பானிஷ் வெளியுறவுத்துறை மந்திரி ஜோஸ் மானுவேல் பாகிஸ்தானில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் மகளிர் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு மூடுவிழா
ஆப்கானிஸ்தானில் மகளிர் விவகாரங்கள் அமைச்சகம் மூடப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. 182 பேரை பலிகொண்ட காபூல் தாக்குதல் பயங்கரவாதி டெல்லியில் கைதாகி சிறை தண்டனை பெற்றவர்...
காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி டெல்லியில் கைதாகி சிறை தண்டனை பெற்றவர் என ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் அமைப்பு தெரிவித்துள்ளது.
3. காபூலில் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்த 10 பேரும் அப்பாவி பொதுமக்கள்: மன்னிப்புகோரிய அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் அருகே கடந்த 29-ம் தேதி அமெரிக்க படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
4. ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
5. ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.