மாநில செய்திகள்

திருவண்ணாமலை: ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம்; சிறுமி உயிரிழப்பு + "||" + Thiruvannamalai: 20 people vomited and fainted after eating biryani at a hotel; Little girl's death

திருவண்ணாமலை: ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம்; சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை:  ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம்; சிறுமி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கி வரும் அசைவ ஓட்டல் ஒன்றில், ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.  அவர், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதே போல், அந்த ஓட்டலில் சாப்பிட்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியர் கவிதா, ஆரணி டி.எஸ்.பி. கோடீஸ்வரன் இருவரும் விசாரணை நடத்தி, அசைவ ஓட்டலுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வரலாற்று சாதனை; கொசு அடிக்கும் பேட் புகைப்படம்... சர்ச்சையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் டுவீட்
தாமஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய அணிக்கு தெரிவித்த வாழ்த்தில் கொசு அடிக்கும் பேட் புகைப்படம் ஒன்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி வெளியிட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
2. பிரபல தொலைக்காட்சி நடிகை வீட்டில் தூக்கு போட்டு உயிரிழப்பு
பிரபல தொலைக்காட்சி நடிகை வீட்டில் தூக்கு போட்ட நிலையில் உயிரிழந்து உள்ளார்.
3. முகமூடி கும்பல் தப்பிச்சென்ற காரை மீட்க சென்னை விரைந்த போலீசார்
முகமூடி கும்பல் தப்பிச்சென்ற காரை மீட்க போலீசார் சென்னை விரைந்தனர்.
4. சீனாவில் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவரால் பரபரப்பு
சீனாவில் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையில் கூறப்பட்ட முதியவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
5. தூத்துக்குடி: வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் 50 ஆண்டுகள் பழமையான வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.