தேசிய செய்திகள்

சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சு; ஓவைசி மீது வழக்கு + "||" + Speech against social harmony; Case against Owaisi

சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சு; ஓவைசி மீது வழக்கு

சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சு; ஓவைசி மீது வழக்கு
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசினார் என அசாதுதீன் ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,


உத்தர பிரதேசத்தில் பாரபங்கி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் பேரணி நடந்தது.  அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற கூட்டத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஏராளமான மக்கள் திரண்டனர். கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதோடு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதுாறாக பேசியதாகவும் ஓவைசி மீது புகார் எழுந்து உள்ளது.

இதனையடுத்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் பாரபங்கி நகர போலீசார், ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இதுபற்றி, காவல் துறை கண்காணிப்பாளர் பிரசாத் கூறும்போது, வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு எதிராக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை துாண்டும் வகையிலும் ஓவைசி பேசி உள்ளார்.

பிரதமர் மற்றும் முதல்-அமைச்சருக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளை தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் வரவிருக்கிற சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஓவைசி திட்டமிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏழை கர்ப்பிணிகளுக்கு கனவாக இருந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நனவாக்கியவர் கருணாநிதி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
ஏழை கர்ப்பிணிகளுக்கு கனவாக இருந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
2. மன உறுதி இருந்தால் போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பேச்சு
மன உறுதி இருந்தால் போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கூறினார்.
3. ரெயிலில் அரை நிர்வாண கோலம்: பீகார் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு
பீகாரின் கோபால்பூர் தொகுதி ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.வான கோபால் மண்டல், கடந்த 2-ந்தேதி டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெறும் உள்ளாடையுடன் உலவினார்.
4. படப்பிடிப்பில் குதிரை பலி மணிரத்னம் மீது வழக்குப்பதிவு
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
5. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே வரம்பு மீறல்: 200 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
கல்லூரி திறந்த முதல் நாளிலேயே வரம்பு மீறல்: 200 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு.