மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் + "||" + 12 day mega vaccination camp across Tamil Nadu: Minister Ma. Subramanian

தமிழகம் முழுவதும் 12ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் 12ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்:  அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் 12ந்தேதி 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


சென்னை,

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.

வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இந்த முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன. கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்படும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகம் கத்தாருக்கு மாற்றம்; அமெரிக்க வெளியுறவு மந்திரி
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகம் கத்தாருக்கு மாற்றப்படுகிறது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
2. பவினா எங்களை பெருமைப்படுத்தி உள்ளார்; தந்தை பேட்டி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஊர்மக்கள் உற்சாகம்
பவினா வெள்ளி பதக்கம் வென்று எங்களை பெருமைப்படுத்தி உள்ளார் என அவரது தந்தை பேட்டியில் கூறியுள்ளார்.
3. சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என நிரூபித்து உள்ளேன்: பவீனா பட்டேல் பேட்டி
இந்திய வீராங்கனை பவீனா பட்டேல், சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து உள்ளேன் என பேட்டியில் கூறியுள்ளார்.
4. பள்ளி கூடத்தில் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கிடைத்து விடுகிறது: கர்நாடகாவில் மாணவி பேட்டி
கர்நாடகாவில் பள்ளி கூடம் திறந்துள்ள சூழலில் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கிடைத்து விடுகிறது என மாணவி பேட்டியில் கூறியுள்ளார்.
5. காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.