தேசிய செய்திகள்

நிபா பாதிப்பு மைசூரில் இல்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்: கலெக்டர் அறிவிப்பு + "||" + Nipah impact is not in Mysore; People Do Not Be Afraid: Collector Notice

நிபா பாதிப்பு மைசூரில் இல்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்: கலெக்டர் அறிவிப்பு

நிபா பாதிப்பு மைசூரில் இல்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்:  கலெக்டர் அறிவிப்பு
மைசூரில் நிபா பாதிப்பு இல்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் கூறியுள்ளார்.

மைசூர்,

கர்நாடகாவின் மைசூரு மாவட்ட கலெக்டர் கவுதம் பகாதி கூறும்போது, கேரளாவில் கொரோனா தொற்று பரவுவதால், அம்மாநில எல்லைப்பகுதியில், கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளோம். துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

கேரளாவிலிருந்து, மைசூருக்கு வருவோரை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். அம்மாநிலத்திலிருந்து வருவோர், கொரோனா நெகடிவ் அறிக்கை வைத்திருப்பது கட்டாயம். அறிக்கை இருந்தால் மட்டும், உள்ளே அனுமதிக்கப்படுவர்.

அக்டோபர் வரை, கேரளாவுக்கு செல்லும் எண்ணத்தை, மக்கள் கைவிடுவது நல்லது.  கேரளா கொரோனா ஹாட் ஸ்பாட்டாக இருந்தது.

தற்போது நிபா தொற்றும் தாண்டவமாடுகிறது. இது, கர்நாடவிலும் நுழையும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். மைசூரில் நிபா தொற்று தென்படவில்லை அதனால் மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நஷ்டம் காரணமாக 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' கார் நிறுவனம் அறிவிப்பு
நஷ்டம் காரணமாக 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் 44 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. காவல்துறையில் 1.60 லட்சம் இணையவழி புகார்கள் பதிவு; முதல்-அமைச்சர் அறிவிப்பு
காவல்துறையில் 1.60 லட்சம் இணையவழி புகார்கள் பதிவாகி உள்ளன என முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
3. தனியார் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
4. வீட்டு வாசல்கள் முன்பு வழிபாடு: தமிழக பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள்
வீட்டு வாசல்கள் முன்பு வழிபாடு: தமிழக பா.ஜ.க. சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் அண்ணாமலை அறிவிப்பு.
5. ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.