தேசிய செய்திகள்

போர்டு நிறுவன முடிவு இந்திய வர்த்தகத்தை பாதிக்காது- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் + "||" + After GM, Harley, Ford Motor drives out, shuts plants

போர்டு நிறுவன முடிவு இந்திய வர்த்தகத்தை பாதிக்காது- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

போர்டு நிறுவன முடிவு இந்திய வர்த்தகத்தை பாதிக்காது- மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
போர்டு நிறுவனத்தின் முடிவு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி, 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்டு நிறுவனம் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் குஜராத்தின் சனாந்தில் கார் உற்பத்தி ஆலைகளை நிறுவியிருந்தன. இந்த ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தப்போவதாக நேற்று முன்தினம் போர்டு நிறுவனம் திடீரென அறிவித்து உள்ளது. இறக்குமதி வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

போர்டு நிறுவனத்தின் இந்த முடிவு இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முடிவு இந்திய வர்த்தக சூழலை எந்தவகையிலும் பாதிக்காது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவின் வாகன வளர்ச்சி விவகாரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் உயிர்ப்புடன் வளர்ந்து வருகிறது. போர்டு நிறுவனம் வெளியேறுவது சாத்தியமான செயல்பாட்டு காரணங்களுடன் தொடர்புடையது. இது இந்திய வாகன உற்பத்தி துறை அல்லது வணிகச்சூழலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்கவில்லை’ என தெரிவித்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் 3,500 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடுகள் இந்தியாவில் வந்திருப்பதாக கூறிய அவர், நாட்டின் வாகனத் துறை தொடர்ந்து கோடிக்கணக்கான டாலர் முதலீட்டை ஈர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும்; மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
2. “கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் தேவை” - மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
3. வைப்புத்தொகை வட்டியை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில்கொண்டு, வட்டி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது: சுப்ரீம் கோர்ட்டு
தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
5. விவசாயத்தின் மீது மத்திய அரசு தேவையான கவனம் செலுத்தவில்லை-சரத் பவார் குற்றச்சாட்டு
மத்திய அரசின் கவனக்குறைவால் விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.