தேசிய செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை + "||" + Australia India Foreign Ministers hold talks today

இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை

இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
புதுடெல்லி,

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள், ‘குவாட்’ கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இவற்றில், இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2+2 பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி, இந்திய ராணுவ மந்திரியுடனும், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி, இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இதற்காக, ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி பீட்டர் டட்டான், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மரிஸ் பய்னே ஆகியோர் நேற்று டெல்லி வந்து சேர்ந்தனர். 2+2 பேச்சுவார்த்தைக்கு முன்பாக, நேற்று ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி பீட்டர் டட்டானுடன் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தநிலையில், 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. ராஜ்நாத்சிங்-பீட்டர் டட்டான் இடையிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்-மரிஸ் பய்னே இடையிலும் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை மேலும் ஸ்திரப்படுத்துவது குறித்து இருநாட்டு மந்திரிகளும் ஆலோசனை நடத்துகிறார்கள். கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் விவாதிக்கிறார்கள்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் பேசுகிறார்கள். இதுதவிர, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்- பாபர் அஸாம் சொல்கிறார்
கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.
2. மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்; இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. இந்திய நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியதா?
கடந்த 16 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாதவாறு இந்திய நீர்மூழ்கிக் கப்பலை தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் நேற்று கூறியது.
5. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.