உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம் + "||" + Brother Of Former Afghan Vice-President Executed By Taliban, Says Family

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், அங்கு விரைவில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபர் என பிரகடனப்படுத்தி உள்ளார்.

அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலீபான்களுக்கும், எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைப்பிடித்துள்ளனர். 

பின்னர் அவரை சித்ரவதை செய்து ெகாலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னரே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ரோகுல்லா கொல்லப்பட்டதாக அந்த மாகாணவாசி ஒருவர் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும் என்று ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.
2. பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் - தலீபான்
பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
3. போராட ,விளையாட ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலீபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில்பெண்கள் உரிமை கோரி நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தலீபான்கள் தடைவிதித்து உள்ளனர்
4. பத்திரிகையாளர்கள் உடம்பில் காயம்: தலீபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ...? பொதுமக்கள் அச்சம்...!
இடைக்கால அரசின் பிரமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலீபான்கள் கைது செய்து உள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் - பரூக் அப்துல்லா
இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.