தேசிய செய்திகள்

மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி + "||" + Prime Minister Modi remembers Mahakavi Bharathiyar

மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
பாரதியாரின் 100-வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி,

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். 

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு என தனது காலத்திற்கு அப்பாற்பட்ட புரட்சிமிகு பாடல்களை இவர் இயற்றியுள்ளார். 

அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டை பாரதியார் நூற்றாண்டு என முதல்-அமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் இன்று பாரதியாரின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100-வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 100 கோடி தடுப்பூசி சாதனை: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.. நீங்கள் டி20 விளையாடுவீர்களா? ஓவைசி விமர்சனம்
இந்திய மக்களின் உயிரோடு காஷ்மீரில், பாகிஸ்தான் தினம் தினம் 20-20 விளையாடுகிறது என ஓவைசி கூறினார்.
3. கேரள முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
4. பசி, வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - கபில் சிபல் கிண்டல்
உலக பட்டினிக் குறியீடு 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
5. அப்துல் கலாம் பிறந்த நாள்: பிரதமர் மோடி புகழாரம்
இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.