தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376- பேருக்கு கொரோனா + "||" + India reports 33,376 new #COVID19 cases, 32,198 recoveries and 308 deaths in last 24 hours, as per Health Ministry.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376- பேருக்கு கொரோனா
இந்தியாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 516- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ளது. கொரோனா வைரசின் 3-வது அலை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்படுவதால் கொரோனா வைரஸ் தொற்று  பரவலை தீவிரமாக மத்திய மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன. தடுப்பூசி  போடும் பணியையும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து மேலும் 32,198-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 308- பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 08 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 516- ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 317- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 497- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53 % ஆக குறைந்தது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,010-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஆந்திரா, ஒடிசா மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்
ஆந்திராவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக அதிகரித்துள்ளது.
4. அசாமில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.