மாநில செய்திகள்

“சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு + "||" + MK Stalin praises Minister Sekar Babu

“சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

“சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தமாக இருக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஒருகால திட்டத்தில் கோயில்களில் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.12,000 வழங்கும் நிகழ்வு சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;-

“சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. 

மேலும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான். இந்த திட்டத்தால் 13,000 குடும்பங்கள் பலனடையும். அறநிலையத்துறையின் சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது. 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தமாக இருக்கும். அனைத்து துறைகளையும் முந்திக்கொண்டு சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு திகழ்கிறார்.”

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
2. விஜயதசமியன்று கோவில்கள் திறக்கப்படுமா? முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைத்த ஊராட்சி
கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்குழாய் இணைப்பு வழங்கி தினமும் குடிநீர் சப்ளை செய்து சாதனை படைத்துள்ளது ஆரணி அருகே உள்ள வெள்ளேரி ஊராட்சி. இதனால் பிரதமர் மோடியின் பாராட்டை பெற்று உள்ளார் ஊராட்சி மன்ற தலைவர்.
4. மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு
சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும், அவரது தந்தை கருணாநிதியை போல் 18 மணி நேரத்திற்கு மேலாகவும் உழைக்கிறார் என்றும் குலாம் நபி ஆசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
5. தமிழ்நாட்டில் போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரிப்பு; மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்த உத்தரவு, ஏரோஸ்பேஸ் என்ஜினீயர்ஸ் நிறுவனத்திடம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது.