மாநில செய்திகள்

விஜயகாந்த் துபாயில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் + "||" + Vijayakanth returns to Chennai after health check-up in Dubai

விஜயகாந்த் துபாயில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்

விஜயகாந்த் துபாயில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்
விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.
சென்னை

தே.மு.தி.க. நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த 30-ந் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் குமார் மற்றும் சோமு உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக அவரால் கணவர் விஜயகாந்துடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு, பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி பிரேமலதாவிடம் பாஸ்போர்ட் திருப்பி கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரும் துபாய் சென்றார்.

தற்போது  விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி உள்ளார். விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.