உலக செய்திகள்

தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு + "||" + India terms Afghanistan situation fragile; Taliban defer swearing-in, Russia not to attend

தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு

தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.
மாஸ்கோ, 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த மாதம் 15-ந் தேதி முடிவுக்கு வந்தது. அங்கு எப்போதும் துப்பாக்கியும், கையுமாக அலைகிற தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசையும் தலீபான்கள் அமைக்க உள்ளனர். 

ஆட்சி பொறுப்பேற்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் விவரங்களை அண்மையில் வெளியிட்டனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி, தலீபான்களின் புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.  ஆனால், பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
2. ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும் என்று ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.
3. போராட ,விளையாட ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலீபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில்பெண்கள் உரிமை கோரி நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தலீபான்கள் தடைவிதித்து உள்ளனர்
4. பத்திரிகையாளர்கள் உடம்பில் காயம்: தலீபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ...? பொதுமக்கள் அச்சம்...!
இடைக்கால அரசின் பிரமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலீபான்கள் கைது செய்து உள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் - பரூக் அப்துல்லா
இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.