மாநில செய்திகள்

ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமை ஆக்கப்படும் -அமைச்சர் மூர்த்தி + "||" + Bonding procedures will be simplified within six months - Minister Murthy

ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமை ஆக்கப்படும் -அமைச்சர் மூர்த்தி

ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமை ஆக்கப்படும் -அமைச்சர் மூர்த்தி
2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
மதுரை

மதுரையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடு நடந்துள்ளன. பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும். வரும் ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமை ஆக்கப்படும் என்று கூறினார்.

மேலும், பத்திரப்பதிவில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மசோதா கொண்டுவரப்படும். முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅவர் கூறினார்.