தேசிய செய்திகள்

பெண் உளவாளியிடம் மயங்கி ராணுவ ரகசியங்களை கொடுத்த ரெயில்வே தபால்துறை அதிகாரி கைது + "||" + Fascinated by the female spy Given military secrets Railway Post Officer Arrested

பெண் உளவாளியிடம் மயங்கி ராணுவ ரகசியங்களை கொடுத்த ரெயில்வே தபால்துறை அதிகாரி கைது

பெண் உளவாளியிடம் மயங்கி ராணுவ ரகசியங்களை கொடுத்த  ரெயில்வே தபால்துறை அதிகாரி கைது
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கி ராணுவ ரகசியங்களை கொடுத்த ரெயில்வே தபால்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்

பேஸ்புக்கில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளியிடம் மயங்கி, இந்திய ராணுவ ரகசிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் பரிமாறியதாக, ராஜஸ்தானில் ரெயில்வே தபால்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தபால்களை பிரித்து அனுப்பும் பொறுப்பில் இருந்த பாரத் கோத்ரா பேஸ்புக் மூலம் அழகி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். போர்ட் பிளேரில் எம்.பி.பி.எஸ் படிப்பதாக கூறியுள்ளார்.

நேரில் சந்தித்து பழகலாம் என வாட்ஸ்அப் வீடியோகாலில் அந்த பெண் பேசிய பேச்சால், சொக்கி போன அந்த அதிகாரி, தபாலில் வந்த ராணுவ தகவல் தொடர்பு ஆவணங்களை படமெடுத்து வாட்ஸ்ஆப்பில் அவருக்கு அனுப்பியுள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றும் உறவினர் ஒருவர்  இடமாறுதலுக்கு  தேவைப்படுவதாகக் கூறி ஆவணங்களை அந்த பெண் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராணுவ புலனாய்வுப் பிரிவினரும், ராஜஸ்தான் மாநில உளவுப் பிரிவினரும் இணைந்து பாரத் பவாரியை கைது செய்துள்ளனர்.

விசாரணைக்கு பிரகே பாகிஸ்தான் உளவு உளவாளியிடம்  ஏமாந்தது அந்த நபருக்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாரத்  கைது செய்யப்பட்டுள்ளார்.