மாவட்ட செய்திகள்

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + Chance of heavy rain in Nilgiris and Coimbatore districts tomorrow

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும், நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்க கடலில் ஏற்கனவே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால், மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.