உலக செய்திகள்

ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ + "||" + Taliban fighter poses in front of bookshelf where Amrullah Saleh recorded message, picture goes viral

ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ

ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ
பஞ்ச்ஷீரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலீபான்கள் அறிவித்தாலும் அதை தலீபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது.
காபூல்

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இந்நிலையில், தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, ஆப்கானிஸ்தானின் அதிபர் நான் தான் என அறிவித்திருந்தார். அவர் தனது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் இருந்துகொண்டு, தலீபான்களுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகளுடன் போராடி வருகிறார். அங்கு தலீபான்களுக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் பயங்கர சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை, தலீபான்கள் கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். மோதலில் அவர் உயிரிழந்ததாக கிளர்ச்சி படையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் பஞ்ச்ஷீரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலீபான்கள் அறிவித்தாலும் அதை தலீபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது. தொடர்ந்து மோதல் நீடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, நூலகம் ஒன்றில் அமர்ந்தபடி அடிக்கடி வீடியோவில் பேசி அதை வெளியிட்டு வருவார் அம்ருல்லா சலே. அதே லைப்ரரியில் தலீபான் படையை சேர்ந்த ஒருவர் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.
2. ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசு அங்கு அமைதியை நிலைநாட்டும் - பாகிஸ்தான் நம்பிக்கை
ஆப்கானிஸ்தானில் தற்போது அமைந்துள்ள இடைக்கால அரசு அங்கு அமைதியை கொண்டு வரும் என பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
3. ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்; பாக்.வெளியுறவுத்துறை மந்திரி
ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் 'கடுமையான விளைவுகளை' ஏற்படுத்தும் என்று ஷா முகம்மது குரோஷி தெரிவித்தார்.
5. பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் - தலீபான்
பெண்கள் மந்திரிகளாக முடியாது... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.