தேசிய செய்திகள்

நீட் எழுத வரும் மாணவர்களுக்கு என்-95 மாஸ்க் - தேசிய தேர்வு முகமை + "||" + NEET 2021 Tomorrow Despite Exam Leak Claims, Record 16 Lakh to Take Medical Entrance

நீட் எழுத வரும் மாணவர்களுக்கு என்-95 மாஸ்க் - தேசிய தேர்வு முகமை

நீட் எழுத வரும் மாணவர்களுக்கு என்-95 மாஸ்க் - தேசிய தேர்வு முகமை
கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதியான நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது.
புதுடெல்லி.

கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதியான நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட உள்ளது.

இது ஒருபுறம் எனில் நாளை மறுநாள் அதாவது திங்கள் கிழமை  நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில்  நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.

அதில்,

* தேர்வு மையங்களில் புதிய என்.95 மாஸ்க் தரப்படும்.

* மாணவர்கள் ஹால்டிக்கெட், 50மி. சானிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி 

* பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு 1.30க்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் கொரோனா அறிகுறிகள் இருந்ததா போன்ற விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

* ஹால் டிக்கெட்டின் முதல் பக்கத்தில் கொரோனா குறித்த சில விவரங்களை பூர்த்தி செய்யவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.