தேசிய செய்திகள்

கேரளாவில் குறையும் தொற்று: மேலும் 20,487 பேருக்கு தொற்று + "||" + Kerala reports 20,487 new COVID19 cases, 22,155 recoveries and 181 deaths in the last 24 hours.

கேரளாவில் குறையும் தொற்று: மேலும் 20,487 பேருக்கு தொற்று

கேரளாவில் குறையும் தொற்று: மேலும் 20,487 பேருக்கு தொற்று
கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 25,010இல் இருந்து 20,487 ஆக குறைந்துள்ளது.
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தை மட்டும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் தீவிரம் பெரிதும் குறையாமல் தொடரும் சூழலில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, கேரளாவில்  கடந்த 24 மணிநேரத்தில்   1,34,861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் புதிதாக  20,487  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் கொரோனா பாதிப்பு விகிதம் 15.19% ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 22, 484ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 22,155 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,31,792பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.