தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 3,075 பேருக்கு கொரோனா + "||" + Maharashtra reports 3,075 fresh COVID19 infections, 3,056 recoveries and 35 deaths today

மராட்டியத்தில் புதிதாக 3,075 பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் புதிதாக 3,075 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் 3,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் இன்று  புதிதாக 3 ஆயிரத்து 075 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் 3 ஆயிரத்து 056 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். 

மாநிலத்தில் இதுவரை 64 லட்சத்து 87 ஆயிரத்து 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 63 லட்சத்து 02 ஆயிரத்து 816 பேர் குணமடைந்தனர். தற்போது மாநிலத்தில் 16 ஆயிரத்து 672  பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாநிலத்தில் மேலும் 35 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 796 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 64,94,254 ஆக அதிகரித்துள்ளது.