தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் + "||" + Rs 2 crore worth of cannabis seized in a lorry in Andhra Pradesh

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது.  அதில், போதை பொருள் கடத்தப்படுகிறது என போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

ராமவரம் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்த லாரியை ஜக்கம்பேட்டை ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் படை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளது.

இதில், 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர, 2.31 லட்சம் பணம் மற்றும் 7 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்
இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருளை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்தனர்.
2. காஷ்மீரில் போலீசார் சோதனையில் ஒருவர் கைது; சீன எறிகுண்டுகள் பறிமுதல்
காஷ்மீரில் போலீசார் மற்றும் ராணுவ கூட்டு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டு சீன எறிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. கேரளாவில் காஷ்மீரை சேர்ந்தவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் பறிமுதல்
கேரளாவில் தனியார் பாதுகாவலர்கள் 18 பேரிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
4. மீன் மார்க்கெட்களில் அதிரடி சோதனை: 275 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
மீன் மார்க்கெட்களில் அதிரடி சோதனை: 275 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை.
5. நடிகர் அமிதாப்பச்சனின் சொகுசு கார் பறிமுதல்?
நடிகர் அமிதாப்பச்சனின் பெயரில் பதிவு செய்து இருந்த ரோல்ஸ் ராய் காரை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.