தேசிய செய்திகள்

போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு + "||" + Not all protesters are farmers; Haryana CM charge

போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு

போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
சண்டிகார்,

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் பற்றி அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் கூறும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரே விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களில் பலர் விவசாயிகளே இல்லை.  மக்களை தவறாக வழிநடத்தும் செயலை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும்.  விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.  அரியானா அரசுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

இது சமூகம் மற்றும் அரியானாவை பாதிக்கிறது.  சட்டம் மற்றும் ஒழுங்குக்கு இடையூறு ஏற்பட்டால், அதனை பாதுகாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும்காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிக்கின்றன ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2. ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு
ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என தெலுங்குதேச பொது செயலாளர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
3. அதிமுக்கிய தேசிய சொத்துகளை விற்க மத்திய அரசு முயற்சி காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி குற்றச்சாட்டு
‘‘தேசிய பணமாக்கல் திட்டத்தின்கீழ் நாட்டின் அதிமுக்கிய சொத்துகளை விற்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது’’, என காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி அஸ்வனி குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
4. அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
5. அனைத்துலக தமிழர் கல்விப்பேரவை வெளியிட்ட தமிழ் பாடப்புத்தகங்களில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது
அனைத்துலக தமிழர் கல்விப்பேரவை வெளியிட்ட தமிழ் பாடப்புத்தகங்களில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது சீமான் குற்றச்சாட்டு.