மாநில செய்திகள்

கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை + "||" + K.R.P. Dam water level rise: Flood warning for 5 districts

கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் உயர்வு:  5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 50 அடியை எட்டிய நிலையில், 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.கிருஷ்ணகிரி,

தென்பெண்ணை ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி அணை சுற்றுவட்டார பகுதிகளிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 2ந்தேதி 47.95 அடியாக இருந்த நீர்மட்டம், 10 நாட்களில் படிப்படியாக உயர்ந்து, நேற்று காலை 50 அடியை எட்டியது. தற்போது அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 417 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி, எந்த நேரத்திலும் தண்ணீர் வெளியேற்றப்படும் என்பதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு, பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்சில் மெகி புயல் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு
பிலிப்பைன்சில் பருவகால புயலான மெகி தாக்கியதில் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளது.
2. கொரோனா பாதிப்பு உயர்வு; கடுமையாக கண்காணிக்க 5 மாநிலங்களுக்கு அரசு உத்தரவு
டெல்லி, கேரளா உள்பட 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடுமையாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
3. எரிபொருள் விலை உயர்வு; தொடர் அமளியால் ராஜ்யசபை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
4. எரிபொருள் விலை உயர்வு; தொடர் அமளியால் ராஜ்யசபை 2 மணி வரை ஒத்தி வைப்பு
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ஏன்? அமைச்சர் கே.என். நேரு விளக்கம்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வுக்கான காரணங்களை அமைச்சர் கே.என். நேரு டெல்லியில் விளக்கியுள்ளார்.