தேசிய செய்திகள்

திரிபுராவில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் பேரணி + "||" + BJP in Tripura Trinamool Congress rally on the 15th against the government

திரிபுராவில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் பேரணி

திரிபுராவில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் பேரணி
திரிபுராவில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பேரணி நடத்துகிறது.

கவுஹாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.  சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-பா.ஜ.க. கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். அக்கட்சியின் இரு அலுவலகங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது.  இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  இதனை பா.ஜ.க. மறுத்துள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் வருகிற 15ந்தேதி, திரிபுராவின் அகர்தலா நகரில் கண்டன பேரணி நடைபெற உள்ளது. 

எனினும், திரிபுராவின் தற்போதைய சூழலை திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
2. செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து சென்னையில் காங்கிரசார் பேரணி
முக்கிய பிரமுகர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் கே.எஸ்.அழகிரி தலைமையில் பேரணியில் ஈடுபட்டனர்.
3. காமராஜர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பேரணி
காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
4. பெரிய நடிகர்களுக்கு எதிராக லாவண்யா
சசிகுமார் ஜோடியாக பிரம்மன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
5. சக்கர நாற்காலியில் அமர்ந்து தொண்டர்களுடன் பேரணி சென்ற மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் சக்கர நாற்காலியில் அமர்ந்து தொண்டர்களுடன் பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார்.