உலக செய்திகள்

கொலம்பியாவில் ராணுவம் மீது கொரில்லா தாக்குதல்; 5 வீரர்கள் உயிரிழப்பு + "||" + Guerrilla attack on the army in Colombia; 5 soldiers killed

கொலம்பியாவில் ராணுவம் மீது கொரில்லா தாக்குதல்; 5 வீரர்கள் உயிரிழப்பு

கொலம்பியாவில் ராணுவம் மீது கொரில்லா தாக்குதல்; 5 வீரர்கள் உயிரிழப்பு
கொலம்பியாவில் ராணுவம் மீது நடத்தப்பட்ட கொரில்லா தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.


பொகோட்டா,

கொலம்பியா நாட்டின் அராவ்கா துறைக்கு உட்பட்ட அராகிட்டா நகராட்சி பகுதியில் ராணுவ வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்தில் 5 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, 6 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் அனைவரும் சுகாதார மையம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழந்த எங்களுடைய நாயகர்களின் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என கொலம்பியா ராணுவம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

ராணுவத்திற்கு நெருக்கடி அளிக்கும் வகையிலான கோழைத்தன செயல் என்று கொலம்பிய அதிபர் இவான் டக் டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்து உள்ளார்.