மாநில செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணை வெளியீடு + "||" + GO Issue for the Establishment of Tambaram Corporation

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணை வெளியீடு

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற போது, நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது

சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2. அடுத்த கல்வியாண்டில் புதிய அரசு கலை கல்லூரிகள் தொடக்கம்- அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.
3. வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கினை சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
4. குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை: கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.