தேசிய செய்திகள்

காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி + "||" + BJP sold everything that Cong built in 70 years: Rahul

காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி

காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி
புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

 பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது மும்பை பயங்கரவாத  தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலுக்குப்பின் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. ஆனால், புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் பேசவில்லை.

காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை பாஜக கடந்த 7 ஆண்டுகளில்  விற்றுவிட்டது. பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து ஊடகங்கள் விமர்சித்தன. அதற்கு முரணாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சித்துவை வெற்றி பெற விடமாட்டேன்: அமரிந்தர் சிங் ஆவேசம்
சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.
2. ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார்- சித்து பாராட்டு
தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்முறையாக முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளதாக சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. ‘நிகழ்ச்சி முடிந்து விட்டது’ தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
மோடி பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
4. பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்க அம்பிகா சோனி மறுப்பு எனத்தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு திருப்பங்களையடுத்து காங்கிரஸ் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் பதவி விலகினார்.
5. நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்: அமரீந்தர் சிங் வேதனை
பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து அமரீந்தர் சிங் இன்று மாலை ராஜினாமா செய்தார்.