தேசிய செய்திகள்

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம்: சிவசேனா + "||" + we'll contest elections on more than 20 seats, we may form an alliance: Sanjay Raut, Shiv Sena

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம்: சிவசேனா

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம்: சிவசேனா
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மும்பை,

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பிரதான எதிர்க்கட்சிகள் தற்போது தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.  இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத் கூறியதாவது; குஜராத் முதல் மந்திரி ராஜினாமா செய்தது அக்கட்சியின் உள்விவகாரம். உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 100 தொகுதிகள் வரை நாங்கள் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.  கோவாவை பொறுத்தவரை 20 தொகுதிகள் வரை நாங்கள் போட்டியிட உள்ளோம். அங்கு கூட்டணி அமைத்து போட்டியிடவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் களமிறங்கும் சிவசேனா
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் சிவசேனா போட்டியிட உள்ளது.
2. நாராயண் ரானே கருத்தால் மத்திய அரசுக்கு அவமானம்; சிவசேனா
பிரதமருக்கு எதிராக யாரேனும் இப்படி பேசியிருந்தால் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் என சிவசேனா கூறியுள்ளது.
3. சிவசேனாவுடன் கூட்டணியில் இல்லாததால் பா.ஜனதாவை விரிவுப்படுத்த பொன்னான வாய்ப்பு: தேவேந்திர பட்னாவிஸ்
சிவசேனாவுடன் கூட்டணியில் இல்லாததால் பா.ஜனதாவை விரிவுப்படுத்த பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
4. நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலி போய்விடாது: சிவசேனா
நினைவு தினம் அனுசரிப்பதால் மட்டும் பிரிவினையால் ஏற்பட்ட வலிகள் போய்விடாது என சிவசேனா கூறியுள்ளது.
5. பெகாசஸ் மென்பொருளுக்கு பணம் கொடுத்தது யார்? சிவசேனா கேள்வி
பெகாசஸ் மென்பொருளுக்கு பணம் கொடுத்தது யார்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.