மாநில செய்திகள்

புனேவில் இருந்து 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை + "||" + Covishield vaccines arrive in Chennai from Pune

புனேவில் இருந்து 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை

புனேவில் இருந்து 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை
புனேவில் இருந்து கூடுதலாக 13.53 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை தமிழக அரசு பெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு செப்டம்பர் மாத ஒதுக்கீடாக 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட உள்ள நிலையில், இதுவரை 54 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று புனேவில் இருந்து மேலும் 13 லட்சத்து 53 ஆயிரம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதோடு சேர்த்து தமிழகம் இதுவரை 3 கோடியே 81 லட்சம் தடுப்பூசிகளை பெற்றுள்ள நிலையில், நேற்று வரை 3 கோடியே 51 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயில் பணி; சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!
மெட்ரோ ரெயில் பணிக்காக சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
2. மனநலம் பாதித்தவர்களுக்கு புது வாழ்வு தரும் தேவதை
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதலாவதாக பேட்டிங்
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.
4. தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1,100 கோடி ரூபாய் கடன் உதவி
சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.
5. புனேவில் இருந்து 11½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.