மாநில செய்திகள்

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? எடப்பாடி பழனிசாமி கேள்வி + "||" + What happened to the promise to cancel the NEET exam? Edappadi Palanisamy Question

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?  எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி  தனது டுவிட்டரில்  கூறியிருப்பதாவது:-

அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? 
ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?

நீட் தேர்வு  நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன். 

அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்  19 வயது  தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க. வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை’ என காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3. "நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.